ஞானப்பசி: கோத்திரம்: கோத்திரம் (Gotram).. கோத்திரம் என்றால் என்ன?..... ஓர் சிறப்பு கண்ணோட்டம்..... அன்புடன் NTN ஜோதிட நிலையம் SPBS சுந்தரமூர்த்தி கந்...
ஸ்படிகம் எப்படி உற்பத்தி ஆகிறது? பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து போன நீர், பாறைகளாக உருமாறி இருக்கும். அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதற்குள் அழுக்குகள், தூசிகள், கம்பிகள் மற்றும் உடைசல்கள் இல்லாத தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில் பட்டை தீட்டி தயாரிக்கலாம். உருண்டையாக தயாரிக்கப்பட்ட ஸ்படிகத்தில் துவாரமிட்டு மாலையாக்கி அணியலாம். இதையே நாம் ஸ்படிக மாலை என்கிறோம். ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதேசங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம். ஸ்படிகப் பாறைகள் ஆறு மற்றும் ஏழு பட்டைகள் கொண்ட தூண்கள், குச்சிகள் போல பூமிக்கு அடியில் கொட்டிக் கிடப்பதுண்டு. இந்த ஸ்படிக குச்சி வகைகளை பாலிஷ் செய்து ரெய்க்கி, ஹீலிங் பயிற்சிக்கு பயன்படுத்துவதும் உண்டு. ஸ்படிகமாலை கோர்க்கும்முறை ஸ்படிகமணி மாலையுடன் வேறு எந்த மணிகளையும் சேர்த்து கோர்த்து அணியக்கூடாது. (ருத்ராட்சமாக இருந்தாலும் சேர்க்கக் கூடாத...
Comments
Post a Comment