Skip to main content

வாழ்க்கை

"புரிதல் + விட்டுக் கொடுத்தல் = வாழ்க்கை"

"நீண்ட தொலைவில் இருந்து இரண்டு குடம் தண்ணீர் எடுத்து வந்து, வீட்டின் கதவை லேசாக திறந்து முன்னாடியே இரண்டு குடத்தையும் வைத்து விட்டு, அடுத்த இரண்டு குடம் தண்ணீரை கொண்டு வர சென்று விட்டாள் மனைவி........

"அந்த நேரம் அவளின் கணவன் மதிய சாப்பாட்டிற்காக வீட்டுக்கு வருகிறான். நல்ல வெயில். பசி வேறு அவனுக்கு.

"வெயிலில் வந்த்தால் உள்ளே இருந்த குடத்தை கவனிக்காமல் தட்டி விட்டு விழுந்து விடுகிறான். இரண்டு குடம் தண்ணீரும் கொட்டி விடுகிறது.

அவனுக்கு கடுமையான கோபம் வந்து விடுகிறது. கொஞ்சமாவது அறிவு வேனாம்? இப்படியா முன்னாடியே தண்ணீர் குடத்தை வைப்பது? வரட்டும் பேசிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே இன்னும் இரண்டு குடத்தோடு வருகிறாள் மனைவி.

" தூக்கி வந்த குடத்தைக் கூட இறக்க விடாமல் அவளைத் திட்டுகிறான். "உன்னையெல்லாம் உங்க வீட்டில எப்படித் தான் பெத்து, வளர்த்தாங்களோ! உனக்கெல்லாம் மூளையே இல்லையா? என்ற படி கண்ட படி திட்டுகிறான்.

இதைக் கேட்ட அவளுக்கு கோபம் தலைக்கேறுகிறது. " நான் எவ்வளவு கஷ்டப் பட்டு எவ்வளவு தூரத்திலிருந்து இந்த தண்ணிய கொண்டு வற்றேன் தெரியுமா?

கண்ணை எங்க வச்சுக்கிட்டு போனிங்க என்று அவள் கேட்க, இப்படியே ஒருவருக்கொருவர் பேசி வார்த்தை பெரிதாகி, அவன் அவளை அறைந்து விடுகிறான்.

"உடனே அவள் 'இனி ஒரு நிமிஷம் கூட உன் கூட வாழ மாட்டேன் என்று சொல்லி விட்டு அவளின் அம்மா வீட்டுக்கு சென்று விடுகிறாள்......

இது கணவன், மனைவிக்குள் ஒரு சின்ன பிரச்சனை எவ்வளவு பெரிய முடிவை எடுக்க வைத்து விட்டது என்பதைக் கூறும் கதை.

இந்தக் கதையின் முடிவு இப்படி இருத்தால் எப்படி இருக்கும்? வாருங்கள் பார்ப்போம்.........

அவன் குடம் தடுக்கி விழுந்து, தண்ணீரை கொட்டி விட்டான். உடனே அவனுக்கு தோன்றியது " அடடா இப்படி கவனிக்காமல் இரண்டு குட தண்ணீரையும் கொட்டி விட்டோமே!

"சே! பாவம் அவள். தண்ணீர் எவ்வளவு தூரத்தில் இருந்து கொண்டு வருகிறாள்? முதல் வேலையா அவள் வந்தவுடன் மன்னிப்பு கேட்டு விட்டு நாமே போய் இரண்டு குடம் தண்ணீர் எடுத்து கொடுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும் போது அவள் தண்ணீரோடு வருகிறாள்.

இவன் ஓடிப் போய் அந்தக் குடங்களை இறக்கியவாறு நடந்ததைச் சொல்லி, "நான் கவனிக்காமல் குடத்தின் மேல் விழுந்து தண்ணீரைக் கொட்டி விட்டேன். நீ எவ்வளவு தூரத்தில் இருந்து இந்த தண்ணீரைக் கொண்டு வருகிறாய் என்னை மன்னித்து விடு. கொடு நான் போய் தண்ணீர் கொண்டு வருகிறேன் என்கிறான்.

உடனே அவள் பதறுகிறாள். "ஐயையோ விழுந்துட்டீங்களா? உங்களுக்கு ஒன்றும் ஆகலையே? தண்ணீர் போனா போகட்டுங்க. நீங்க என்ன வேனும்னா கொட்டி விட்டீங்க! தெரியாமத் தானே! அங்க தண்ணிய வச்சது என் தப்பு. நான் போய் எடுத்துக் கொள்கிறேன்.

நீங்க வாங்க சாப்பிட. நல்ல பசியோடு வந்திருப்பீங்க பாவம் என்கிறாள். (அவள் திட்டியிருந்தால் கூட இவ்வளவு தண்டனை கிடைத்திருக்காது அவனுக்கு).

அவன் அப்படியே நெகிழ்ந்து போகிறான். அவள் மேல் அவனுக்கு இன்னும் அளவு கடந்த பாசம் உண்டாகிறது உள்ளுக்குள்.

இவ்வளவு தான் நம் வாழ்க்கையும்!கணவனோ, மனைவியோ தெரிந்து யாரும் தப்பு செய்வதில்லை. இருவரில் ஒருவர் ஒரு படி இறங்கினால், மற்றவர் கண்டிப்பாக பத்துப் படி இறங்கி வருவார்.

நம்மைப் பார்த்து தான் நம் பிள்ளைகள் வளர வேண்டும்.........

"புரிதலும், விட்டுக் கொடுத்தலுமே வாழ்க்கை!

Comments

Popular posts from this blog

ஸ்படிகமாலை

ஸ்படிகம் எப்படி உற்பத்தி ஆகிறது? பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து போன  நீர், பாறைகளாக உருமாறி இருக்கும்.  அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதற்குள் அழுக்குகள், தூசிகள், கம்பிகள் மற்றும் உடைசல்கள் இல்லாத தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில் பட்டை தீட்டி தயாரிக்கலாம். உருண்டையாக தயாரிக்கப்பட்ட ஸ்படிகத்தில் துவாரமிட்டு மாலையாக்கி அணியலாம். இதையே நாம் ஸ்படிக மாலை என்கிறோம். ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதேசங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம். ஸ்படிகப் பாறைகள்  ஆறு மற்றும் ஏழு  பட்டைகள் கொண்ட தூண்கள், குச்சிகள் போல பூமிக்கு அடியில் கொட்டிக் கிடப்பதுண்டு. இந்த ஸ்படிக குச்சி வகைகளை பாலிஷ் செய்து ரெய்க்கி, ஹீலிங் பயிற்சிக்கு பயன்படுத்துவதும் உண்டு. ஸ்படிகமாலை கோர்க்கும்முறை  ஸ்படிகமணி மாலையுடன் வேறு எந்த மணிகளையும் சேர்த்து கோர்த்து அணியக்கூடாது. (ருத்ராட்சமாக இருந்தாலும் சேர்க்கக் கூடாத...

பக்தனை கடவுள் சோதிப்பது ஏன்?

பக்தனை கடவுள் சோதிப்பது ஏன்? கேள்வி - உண்மையான பக்தனை கடவுள் சோதிப்பது ஏன்? பக்தனுக்கு சோதனை தராமல் அருள் செய்யும் கடவுளே இல்லையா?    இராம் மனோகர் - ஒருவரிடம் வட்டிக்குக் கடன் வாங்குகிறோம், மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாகச் செலுத்தி விடுகிறேன் என்று சொல்லிக் கடன் வாங்கிச் செலுத்திக் கொண்டே வருகிறோம். வட்டியைத்தான் செலுத்த முடிகிறதே தவிர, கடன் அடைந்த பாடில்லை. குடும்பத்தில் அனைவரும் கலந்து பேசி அதை, இதை விற்றாவது முழுக் கடனையும் அடைத்து விட வேண்டும் என்று முடிவு செய்கிறோம். நகை நட்டு, நிலபுலன்கள் என்று அனைத்தையும் விற்றுக் கடனை அடைத்து விட்டு அமைதியடைகிறோம். மொத்த கடனையும் அடைக்க வேண்டும் எனும் பொழுது மிகுந்த சிரமம் ஏற்படத்தான் செய்யும் எனினும் கடனை அடைத்து விட்டால் பெரிய நிம்மதி வந்து விடுகிறது. அது போலத்தான் உண்மையான பக்தன் நிலையும் இருக்கிறது. மாதா மாதம் வட்டி செலுத்துவது போல, வினைகளை அனுபவிப்பதும், மேலும் வினைகளைப் பெருக்கிக் கொள்வதும் சராசரி மனிதனின் நிலையாக இருக்கிறது. ஆனால், பக்தன் அவ்வாறு அல்லவே ? அவன் மொத்த வினைகளையும் வேரறுக்க நினைக்கிறான். இந்தப் பிறவியிலேயே வின...

தென்னிந்தியாவில் வன்னியரே சத்ரியர் தென்னிந்திய இராஜபுத்திரர்கள்

பிறந்தசாதி பெருமையை அறிவோம். 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🔥வன்னியர் மட்டுமே சத்ரியர். அரசு ஆணை எண் .271. நாள்.13.6.1929.ல் வெளியீடு . 🔥🔥🔥🔥🙏🏻🔥🔥🔥🔥 🔥தென்னிந்தியாவில் வன்னியரே சத்ரியர். தென்னிந்திய இராஜபுத்திரர்கள். 🔥தமிழ்நாட்டில், "வன்னிய குல சத்ரியர்" 🔥ஆந்திராவில், "அக்னி குல சத்ரியர் " 🔥கேரளாவில், "சம்பு குல சத்திரியர்" 🔥கர்நாடாகாவில், "திகளர் குல சத்ரியர்"  🔥என தென்னிந்தியா முழுவதும், அரசாணை வழங்கப்பட்டது. 🔥கி.பி1886.இந்தியாவிலேயே முதல் முதலாக "வன்னிய குல சத்ரிய" மஹா சங்கம், மதராஸ் பிரசிடென்சியில், 🔥 மகான் ஸ்ரீ கா.கோபால் நாயக்கர் அவர்களால் துவக்கப்பட்டது. 🔥வன்னியர்கள் (பள்ளி) என்ற பெயரை "வன்னிய குல ஷத்ரியர்" எனப் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்று ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்து நீதிமன்றம் மூலமாக வழக்கு தொடுத்து  🔥வன்னியர்கள் "சத்ரியர் "என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி வெற்றியும் பெற்றார்கள். 🔥பின்பு நாங்களும் சத்ரியர்தான் என்...